திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு சங்க அண்ணா தொழிற்சங்க செயலாளர் அருள்சாமி தலைமை வகித்தார்.

இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:-

திமுக அரசு அண்ணா தொழிற்சங்கத்தினரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சு.குணசேகரன், திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் தங்கவேல், தலைவர் ரவீந்திரன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...