கேரளாவில் பரவும் 'தக்காளி காய்ச்சல்' எதிரொலி - தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்…!

கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சல் எதிரொலியாக தமிழக -கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி, காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர்.



கோவை: கேரளாவில் குழந்தைகளிடம் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து கோவை - கேரளா எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.



கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலுக்கு இதுவரை 85-குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்துத் தாக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாகசருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. அதிக பாதிப்பு காரணமாக கொல்லம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன.

கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக - கேரளா எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை உள்ளிட்ட 13-சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



வாளையாறு வழியாக கோவை வரும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே மாவட்டத்தில் வர அனுமதி வழங்கப்படுகிறது.

அதே போல் கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...