சட்டவிரோதமாக கிலோ கணக்கில் கஞ்சாவை விற்பனை செய்து வந்த இளையராஜவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதியரசர் லோகேஸ்வரன் தீர்ப்பு வழங்கினார்.
கோவை: 22 கிலோ கஞ்சாவுடன் கோவை வந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா (60). இவர் கடந்த 2020 ல், துணிப்பையில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்ய கோவை வந்துள்ளார். அப்போது, கோவை ரயில்நிலையம் அருகே விற்பனைக்கு காத்திருந்த போது, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர், அவரிடமிருந்து இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, சட்டவிரோதமாக கிலோ கணக்கில் கஞ்சாவை விற்பனை செய்து வந்த இளையராஜவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதியரசர் லோகேஸ்வரன் தீர்ப்பு வழங்கினார்.