கோவையில் 60 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் ஆரம்பம்

கோவையில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம், 60 வார்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்றாம் மாடி வரை தண்ணீர் தானாகவே ஏறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது, என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

கோவையில், 5.59 கோடி ரூபாயில் முடிவுற்ற, 9 திட்டப்பணி திறப்பு விழா, 49.62 கோடியில், 263 புதிய திட்டப்பணி தொடங்கும் விழா, மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.



நிகழ்ச்சியில் பேசிய, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, கோவை மாநகராட்சியில் திட்டங்களில், 715 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணி, 196 கோடி ரூபாயில் நடந்து கொண்டிருக்கிறது. அவற்றுடன், புதிதாக, 237 சாலைப் பணிகள், 26.35 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி, 63 நகர்நல மையங்கள் கட்டுவதற்கான பணி, 16 கோடியில் நடந்து வருகிறது. தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் இல்லாத வகையில், கோவையில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம், 60 வார்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்றாம் மாடி வரை தண்ணீர் தானாகவே ஏறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது, என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

மேலும், "நமக்கு நாமே" திட்டத்தில், 20.50 கோடி ரூபாயில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் பேசினார்.

விழாவில், அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. 18 நபர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை உத்தரவும் வழங்கப்பட்டது. மேலும், மாநகராட்சியின் ஓராண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது.



நிகழ்ச்சியில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், கூடுதல் தலைமை செயலர் சிவதாஸ் மீனா, கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



வாலாங்குளம், சுங்கம் ஆகிய இடங்களில் நிறைவேற்றப்பட்ட பணிகளையும் அமைச்சர் நேரு பார்வையிட்டார். குப்பை கிடங்கு சுத்தமாகும்! செய்தியாளர்களிடம் அமைச்சர் நேரு கூறியதாவது: குறிச்சி குளம் அழகுபடுத்தும் பணியின்போது கரை கான்கிரீட்டில் அமைக்கப்பட்டு விட்டது என்றும், தண்ணீர் தேங்கும் நீர்ப்பரப்பை குறைத்து விட்டனர் என்றும் புகார் எழுந்துள்ளது.



சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை விரைவில் அழைத்து பேசி, புகார் இல்லாதபடி பணியை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். புலியகுளம்-சவுரிபாளையம் சாலை, அவிநாசி சாலையில், 3 இடங்கள், எஸ்.என்.ஆர்., சாலையில் ஒரு இடம் என, ஐந்து சாலைகளை இணைக்க, 144 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

வெள்ளலுார் குப்பைக்கிடங்கை சுத்தம் செய்வதற்காகத்தான், மின்சாரம் தயாரிக்கும் ஆலை கோவையில் அமைக்கப்பட உள்ளது. இதற்கென அதிகாரிகள், ஐதராபாத் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர். வெள்ளலுாரில் 'பயோ மைனிங்' மூலம் ஏற்கனவே, 16 ஏக்கர் சுத்தம் செய்யப்பட்டு விட்டது. பெரிய அளவில் சேரும் இடங்களில் எல்லாம் 'பயோ மைனிங்' முறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...