திருப்பூரில் தனியார் உணவகத்தில் சாம்பாரில் கரப்பான் பூச்சி - உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை

திருப்பூரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சாப்பாட்டின் போது சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அந்த உணவை ஆய்வுக்கு அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் கேசவன்.



இவர் இன்று பிற்பகல் திருப்பூர் குமரன் ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல அசைவ உணவகத்தில், குடும்பத்துடன் உணவருந்த சென்றார்.

அப்போது, அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள், ஓட்டல் உரிமையாளரிடம் கேட்ட பொழுது முறையான பதில் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கேசவன் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கரப்பான் பூச்சி இருந்த சாம்பாரின் மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

இதன் முடிவுகள் வந்த பின்னரே அந்த உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



மேலும் சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...