கோடநாடு கொலை கொள்ளை வழக்கு - சயானிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் மீண்டும் விசாரணை..!

ஏற்கனவே, கோத்தகிரியில் வைத்து விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், மீண்டும் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் மறு விசாரணை நடந்து வருகிறது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த வழக்கில் ஐஜி சுதாகர் தலைமையில் மறுவிசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மறுவிசாரணையில், முதல் முறையாக சசிகலா, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, சஜீவன், அவரது சகோதரர்கள், உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள சயானிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, அவரிடம் கோத்தகிரியில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது எழுத்துப்பூர்வமாக வாக்கு மூலம் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...