கோவையில் சாலையில் சென்ற பெண்கள் உட்பட 10-பேரை கத்தியால் தாக்கி - குடிபோதையில் இளைஞர்கள் அட்டூழியம்..!

நரசிம்மநாயக்கன்பாளையத்தில், குடிபோதையில் கத்தியால் தாக்கி அட்டூழியம் செய்த 6-பேர் மீது 11-பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் சாலையில் சென்ற பெண்கள் உட்பட 10-பேரை குடிபோதையில் கத்தியால் தாக்கி அட்டூழியம் செய்த 6-பேர் மீது 11-பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் வெங்கடசாமி இவரது மனைவி முத்துலட்சுமி (50). இவர்களுக்குச் சொந்தமான ஆறு வீடுகள் வாடகைக்கு விட்டுள்ளனர். அதில் ஒரு வீட்டில் தியாகு மற்றும் கார்த்தி என்ற இருவர் தங்கியுள்ளனர்.

மேலும் இவர்கள் சாலையோரத்தில் ஹெல்மெட் விற்பனை செய்யும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பழக்கமான ஆறுமுகம் என்பவர் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவசுப்பு (23), மகாராஜா (25), ஹரிகரன் (24), சத்தியபாலன் (25), முத்துவேல்முருகன் (21), சுரேஷ் (40) ஆகிய 6-பேரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தியாகுவின் அறையில் தங்கியுள்ளனர்.

மேலும், அன்றைய தினமே கோவை மத்திய சிறைக்கு சென்ற 6-பேரும் தெரிந்த நண்பர் ஒருவரை பார்த்து வந்ததாக தெரிகிறது.



இதையடுத்து, நேற்று முன் தினம் சிவா என்பவரது பிறந்த நாளை கொண்டாட ஆறு பேரும் மது குடித்துவிட்டு அங்கு கூச்சலிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, வீட்டு உரிமையாளர் முத்துலட்சுமி அங்கு சென்று அவர்களை கண்டித்துள்ளார். மேலும் மறுநாள் முத்துலட்சுமி சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டியை 6 பேரும் குடிபோதையில் அடித்து உடைத்திருந்தனர். இதுகுறித்து மீண்டும் முத்துலட்சுமி கேட்டபோது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் நேற்று மாலை குடிபோதையில் ஆறுபேரும் முத்துலட்சுமி வீட்டிற்குள் சென்று அவரை கத்தியால் குத்தி உள்ளனர். தடுக்கச் சென்ற அவரது கணவர் வெங்கடசாமி, அவரது மகளையும் அடித்துள்ளார்.

இதையடுத்து, வீட்டிலிருந்த பொருட்களை உடைத்துவிட்டு வெளியே வந்த ஆறு பேரும் சாலையில் சென்ற சண்முகசுந்தரம், பூர்ணிமா, கிருஷ்ணன், சசிகுமார், புனிதா, கனக சிவம், அபிநவ், தாரணி, தீபா, பிருந்தா ஆகிய 10-பேரையும் எந்த காரணமும் இல்லாமல் கத்தியால் குத்தி அட்டூழியம் செய்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு கூடிய பொதுமக்கள் 6-பேரையும் பிடித்து சரமாரியாகத் தாக்கி பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



இதையடுத்து, அங்கு வந்த போலீசார் காயம் அடைந்த 6-பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.



மேலும், குடிபோதையில் கத்தியால் தாக்கி அட்டூழியம் செய்த சிவசுப்பு, மகாராஜா உள்ளிட்ட 6-பேர் மீதும் கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 11-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



மேலும் சிகிச்சைக்குப் பிறகு ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க உள்ளனர். போதை ஆசாமிகளின் இந்த செயலால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...