கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், கட்டிட தொழிலாளியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனையும் 1,000-ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கோவை: கோவையில் கட்டிட தொழிலாளி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பின் விவரம் வருமாறு:-

கோவை நீலிகோணம்பாளையம் அருகில் வசிப்பவர் சக்திவேல் 27, காங்கிரிட் வேலை செய்து வருகிறார். சிங்காநல்லூர் பகுதியில் வசிக்கக் கூடியவர் சுப்பன் வயது 30, இவரும் அதே வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில், காங்கிரீட் வேலை முடிந்து கடந்த 15.5.2019 -அன்று மாலை சிங்காநல்லூர் ஒயின் ஷாப்க்கு சுப்பன் மற்றும் சக்திவேல் மது அருந்தச் செல்கின்றனர்.
மது அருந்திவிட்டு போதையில் வெளியே வரும்பொழுது சக்திவேலைப் பணம் கொடுக்க சொல்கிறார். அதற்கு சக்திவேல் கொடுக்க மறுக்கிறார். இதனைத்தொடர்ந்து சுப்பன், சக்திவேல் உடைய தாயாரைத் தவறுதலாகப் பேசுகிறார்.
இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் பார் வாசலில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து அவர் தலையில் போட்டு கொலை செய்கிறார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதைத்தொடர்ந்து கோவை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி எஸ்.நாகராஜன் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.