கோவையில் வீடுகளுக்கு வெளியே தாழ்ப்பாளிட்டு கொண்டிருந்த இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் ஊருக்குச் செல்ல பணமில்லாமல் இருந்ததால் அன்பு இல்லத்திற்கு ரயில்வே போலீசார் அனுப்பி வைத்ததும், அன்பு இல்லத்தில் இருந்து தப்பி வந்ததும் தெரியவந்தது.


கோவை: கோவையில் வீடுகளுக்கு வெளியே தாழ்ப்பாளிட்டு கொண்டிருந்த இளைஞரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் அருகில் இன்று காலை வட மாநில வாலிபர் ஒருவர் அப்பகுதியில் இருந்த பெண் ஒருவரிடம் போன் செய்ய செல்போன் கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு அந்த பெண் செல்போனை தராமல் வீட்டினுள் சென்று விட அந்த வட மாநில வாலிபர் வீட்டில் கேட்டை தாழிட்டுள்ளார். இதனை கண்ட அருகில் இருந்த மக்கள் சந்தேகமடைந்து அந்த வாலிபரை பிடித்து காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். பின்னர், காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராகுல்(18) எனவும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் ஊருக்குச் செல்ல பணமில்லாமல் இருந்ததால் அன்பு இல்லத்திற்கு ரயில்வே காவல்துறையினர் அனுப்பி வைத்ததும், அன்பு இல்லத்தில் இருந்து தப்பி வந்து அப்பகுதியில் இருந்த பெண்ணிடம் செல்போன் கேட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, தற்போது அந்த வாலிபர் உக்கடம் பகுதியில் உள்ள அன்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார். தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...