கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரம்..!

மேலும், கோவை மாநகர பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 6,190 அலுவலர்களுக்கு பயிற்சி பணி ஆணை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 6,190 அலுவலர்களுக்கு பயிற்சி பணி ஆணை வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 1290 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல 7 பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மண்டல அலுவலர்கள் தலைமையிலான 95 குழுவினரால், காவல்துறையினர் பாதுகாப்போடு வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல உள்ளது.



இதற்கிடையே, வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற 6190 பணியாளர்களுக்கு கோவை நிர்மலா கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதி கட்ட பயிற்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது, அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டது.



இந்த பயிற்சியை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்தராவ், கோவை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அதிகாரியுமான ரஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...