கோவையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!

காமராஜபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அங்குள்ள இஸ்திரி கடைக்கு சென்று துணிகளுக்கு இஸ்திரி போட்டு கொடுத்து வாக்குகளை சேகரித்தார். அப்பகுதி மக்களுடன் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.


கோவை: கோவை காமராஜபுரத்தில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அங்குள்ள ஒரு இஸ்திரி கடையில், துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கவர்ந்து வாக்குகளை பெற பல்வேறு புதிய உக்திகளை வகுத்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.



அந்த வகையில், இன்று கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,கோவை மாநகராட்சி பகுதிகளான ஆவாரம்பாளையம் மற்றும் காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் பா.ஜ.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது, பிற்படுத்தப்பட்டமக்கள் அதிகம் வாழும் காமராஜபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அங்குள்ள இஸ்திரி கடைக்கு சென்று துணிகளுக்கு இஸ்திரி போட்டுகொடுத்து ஆதரவு கோரினார்.



அப்பகுதி மக்களுடன் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.பின்னர், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருவதாக அப்பகுதி மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...