கோவை மாவட்ட ஆணையாளரிடம் இன்று சமூக நீதி கட்சி மனு

கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக பணியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களைத் தேர்தல் பணியிலிருந்து ரத்து செய்ய வேண்டும் என்று சமூக நீதி கட்சி கோவை மாவட்ட ஆணையாளரிடம் இன்று மனு அளித்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக பணியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களைத் தேர்தல் பணியிலிருந்து ரத்து செய்ய வேண்டும் என்று சமூக நீதி கட்சி கோவை மாவட்ட ஆணையாளரிடம் இன்று மனு அளித்துள்ளது.

அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரே இரவில் 54 இளநிலை உதவியாளர்கள் என அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களுக்குச் சட்டவிரோதமாக இளநிலை உதவியாளர் என்ற பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கிய பணியை ரத்து செய்யக்கோரி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஈஸ்வரி தொடர்ந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த 54 இளநிலை உதவியாளர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வேலை செய்ய வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இவர்களது வேலையை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இவர்களுக்குத் தேர்தலில் முக்கிய பணிகளான வாக்குச்சீட்டு கொடுத்தல், தபால் ஓட்டுக்களைச் சரிபார்த்தல், EVM மிஷினை கண்காணித்தல் போன்ற பணிகள் ஒதுக்கபட்டுள்ளன.

ஆகவே, உடனடியாக அதிமுக சட்டவிரோதமாகப் பணி நியமனம் செய்த 54 இளநிலை உதவியாளர்களின் தேர்தல் பணிகளை ரத்து செய்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு சமூக நீதிக் கட்சி மனு அளித்துள்ளனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...