கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 இலட்சம் பறிமுதல்..!

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 இலட்சம் கோவை மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம்‌ ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவையில் வாகன சோதனையின்போது எவ்விதமான உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.2 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ 2022 நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, பறக்கும்படை குழுவினர்‌- III (FST IIl) 07.02.2022 அன்று மாலை 6.35 மணியளவில்‌ கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69க்குட்பட்ட பாரதிபார்க்‌ சாலை, 4வது வீதி, ஜி.சி.டி.எதிரில்‌ வாகன சோதனையின்போது எவ்விதமான உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.2,00,000/- (ரூபாய்‌ இரண்டு இலட்சம்‌ மட்டும்‌) கைப்பற்றப்பட்டது.

கோவை ரேஸ்கோஸ்‌ பகுதியில்‌ உள்ள சார்பு கருவூல அலுவலர்‌ அவர்களிடம்‌ தகவல்‌ தெரிவிக்கப்பட்டு, கோயம்புத்தூர்‌ மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம்‌ ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...