நெகமம் பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் 8 பேர் போட்டியின்றி தேர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பேரூராட்சியில், திமுக வேட்பாளர்கள் 8 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வார்டு எண் 1. 2, 4, 5, 10, 13 ஆகிய 6 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பேரூராட்சியில், திமுக வேட்பாளர்கள் 8 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் பேரூராட்சிக்கு அறிவிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், வார்டு எண் 3, 6, 7, 8, 9, 11, 12, 14,15 ஆகிய 9 வார்டுகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தவர்கள் மனுக்களை வாபஸ் பெறப்பட்டதால், 3வது வார்டில் எம்.பிரியா, 6வது வார்டில் ஜெ.பரமேஸ்வரி, 7வது வார்டில் என்.தேவிகா, 8வது வார்டில் கே.நந்தவேல்முருகன், 11வது வார்டில் ஆர்.கஸ்தூரி, 12வது வார்டில் டி.கலைமணி, 14வது வார்டில் ப.நாகராஜ் 15வது வார்டில் ஆர்.சபரீஸ்வரன் என 8 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும், ஒரு வார்டில் (9வது வார்டு) சுயேச்சை வேட்பாளர் ஆர்.ரவி என்பவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனால் மொத்தமுள்ள 15 வார்டுகளில் பெரும்பான்மை வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதால் நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. வார்டு எண் 1. 2, 4, 5, 10, 13 ஆகிய 6 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...