பொள்ளாச்சி அருகே கூலி தொழிலாளியை கட்டையால் தாக்கி கொன்றவர் கைது

பொள்ளாச்சி அருகே மது அருந்தச் சென்ற இடத்தில், இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றில், கூலி தொழிலாளியைக் கட்டையால் தாக்கி கொன்றவர் கைது செய்யப்பட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே மது அருந்தச் சென்ற இடத்தில், இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றில், கூலி தொழிலாளியைக் கட்டையால் தாக்கி கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (34), தேங்காய் உறிக்கும் தொழிலாளி. இவர் கடந்த 5-ம் தேதி திவான்சாபுதூர் அருகே தனியார் தோட்டத்தில் தேங்காய் உறிக்கும் பணிக்குச் சென்றார்.

இந்நிலையில், பணியை முடித்த பிறகு இரவு அதே தோட்டத்தில் பணிக்கு வந்த உடுமலையைச் சேர்ந்த செல்வராஜ் (40) என்பவருடன் மது அருந்தச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு இருவருக்கும் ஏற்பட்டதகராற்றில், செல்வராஜ் மகாலிங்கத்தைக் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாகத் தெரிகிறது. இதில், மகாலிங்கம் உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார் தப்பி ஓடிய செல்வராஜை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆலங்கடவு அருகே வைத்து செல்வராஜை நேற்று போலீசார் கைது செய்தனர். பின், விசாரணையில் குடி போதையிலிருந்த போது மகாலிங்கம் செல்வராஜை தள்ளி விட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகிலிருந்த கட்டையை எடுத்து மகாலிங்கத்தைத் தாக்கியதில், அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து செல்வராஜ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...