பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்..!

பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக வேட்பாளர்களுக்கு A,B,C படிவங்கள் வழங்கப்பட்டது.



இதனையடுத்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் செய்த சாதனைகளையும், சட்டமன்ற தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் பொய்ப் பிரச்சாரங்களையும் மக்களிடையே கொண்டு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்று பொள்ளாச்சி நகராட்சியை அதிமுக கைப்பற்ற வேண்டும் என்று பேசினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் PRK. குருசாமி, மாவட்ட பிரதிநிதிகள் அருணாச்சலம், இரும்பு குரு, நகர பொருளாளர் வருகை கனகு, அக்னீஷ் முகுந்தன், காளிமுத்து உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...