எஸ்.என்.எஸ் கல்லூரியில் தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடன் "உயர் கல்வி தரம்" குறித்து கலந்துரையாடல்

எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "உலகளாவில் கல்வி முறை மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின்" தொடர்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையம்மாள் ஹாலில் இன்று நடைபெற்றது. இதன் முக்கிய நோக்கமாக அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் சர்வேதேச அளவில் உலகளாவிய தாக்கத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்த கற்பித்தல் மற்றும் கல்வி வளர்ச்சி நிலையில் உன்னத நிலையை அடைவதே ஆகும். இதில் கோயம்புத்தூர் நகரில் புகழ்பெற்ற தன்னாட்சி கல்லூரிகளில் இருந்து கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை விவாதித்தனர்.



இதில், ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் "நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் மாணவர் சேர்க்கை" பற்றியும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் "கற்பித்தல் மற்றும் கற்றல்" குறித்தும் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜ்குமார் "வேலைவாய்ப்புத் திறன் மற்றும் தொழில் முனைவு" குறித்தும் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன் "உயர் கல்வியின் புதுமை" பற்றியும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் நிர்மலா "ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை விரிவாக்கம்" என்ற தலைப்பிலும் பேசினார். இதனை ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருநாவுகரசு நடுவராக இருந்து தொகுத்து வழங்கினார்.



Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...