தேர்தல் விதிமுறைகள் காரணம்காட்டி, காந்தியடிகளை கொலை செய்தவர்கள் குறித்து பேசவும், உறுதி மொழி ஏற்க கோவை காவல்துறையினர் மறுப்பு...!

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் "இந்து" மதவெறியர்களால் கொல்லப்பட்ட என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதனை காவல்துறையினர் அகற்றும்படி தெரிவித்தனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், கட்சி மற்றும் அமைப்புகள் பெயர்கள் பேனரில் வைக்க அனுமதி இல்லை என்று காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.


கோவை: நாட்டின் தேச தந்தை என்று போற்றப்படும் காந்தியின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலனி பகுதியில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர்.



அப்போது உறுதிமொழியை ஏற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், உறுதிமொழி ஏற்க காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் 'இந்து' மதவெறியர்களால் கொல்லப்பட்ட என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதனை காவல்துறையினர் அகற்றும்படி தெரிவித்தனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், கட்சி மற்றும் அமைப்புகள் பெயர்கள் பேனரில் வைக்க அனுமதி இல்லை என்று காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.



அதனைத் தொடர்ந்து, 'இந்து' என்ற வார்த்தை மட்டும் மறைக்கப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி. அவ்வாறு, உறுதிமொழி ஏற்கும் போது 'ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் காந்தியடிகள் கொல்லப்பட்டார்' என்று தெரிவித்தனர். அவ்வாறு, கூறக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்தனர்.

இதனால், மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், மிகுந்த சர்ச்சைக்கு பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிநடத்தப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,மதசார்பின்மையை காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

72 ஆண்டுகளாக காந்தியடிகளின் பாடல்கள் இசைத்து வந்த நிலையில், இம்முறை அதற்கு அனுமதி மறுத்ததாக தெரிவித்தார். மேலும், நாங்கள் எந்த ஒரு மதத்தையும் சுட்டிக்காட்டவில்லை எனவும் நடந்ததை தான் கூறியதாகவும் தெரிவித்தார்.காந்தி அடிகளை சுட்டுக்கொன்ற கோட்சேவை சிலர் புகழ்வது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...