திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை.


திருப்பூர்: திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலில் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாநகர காவல்துறையின் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோயில் அர்ச்சகர் சங்கரநாராயணன் நேற்று இரவு சுமார் 7.45 மணியளவில் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கோயிலை திறந்து வழக்கமான பூஜைக்காக சென்றபோது, மூலவர் சன்னதியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர் இரும்புக் கம்பி கொண்டு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் மற்றும் பகுதி முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோயிலுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்ட நபரின் உருவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால், அந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதனடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள கோயிலில் நடைபெற்ற இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதே கோயிலில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் திருட்டு முயற்சி நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...