சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியான கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் மீதான விசாரணையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இருவரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இருவரிடமும் காவல் விசாரணை நடத்துவதன் மூலம் வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அது உதவியாக இருக்கும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, சிறையில் இருந்தபோது உணவு அருந்தச் சென்ற நேரத்தில், சக கைதிகள் ஐந்து பேர் இணைந்து தட்டு, டம்ளர், கரண்டி உள்ளிட்ட பொருட்களால் கார்த்திக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து கார்த்திக்கை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஐந்து கைதிகள் திருச்சி மற்றும் வேலூர் சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...