கோவையில் துவங்கிய ஜல்லிக்கட்டு விழா

கோவையில் இன்று ஜல்லிக்கட்டு திருவிழா - 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுடன் துவங்கியது. விழாவை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை: கோவையில் இன்று ஜல்லிக்கட்டு திருவிழா - 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுடன் துவங்கியது. விழாவை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை செட்டிபாளையத்தில், கோவை மாவட்டம் நிர்வாகம் கண்காணிப்பில்  கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.



ஜல்லிக்கட்டு விழாவை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். 

இந்த ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.



மாடுகளுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

மாடுகளுடன் வருபவர்களும், மாடு பிடி வீரர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சிக்கு வரக்கூடிய அலுவலர்கள், பத்திரிக்கையாளர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டிருந்தார்.அதன்படி, சான்றிதழ் கொண்டு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, நேற்று மாலை முதலே வெளியூர்களில் இருந்து காளைகள் வர துவங்கியது. தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டி போட்டியை தொலைகாட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும் பகுதியில், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



முதல் காளையாக சரவணம்பட்டி பெருமாள் கோவில் காளை, களம் இறங்கியது. மேலும், முதல் சுற்று முடிவில் 12 பேர் மாடு பிடித்து, இறுதி சுற்றுக்கு தேர்வாகினர்.

அதே போல், 3 வது சுற்று நிறைவில், இதுவரை 376 காளைகள் களம் கண்டுள்ளன. அதில், 15 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். 

4 வது சுற்றுக்கு பச்சை பனியன் அணிந்த மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர். இதுவரை, 124 மாடுகளுக்கு தங்க காசுகள் வழங்கப்பட்டுள்ளது.



Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...