நகை வியாபாரியிடம் 2-கிலோ நகை மற்றும் 7.5-லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், மூவரை கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நிபந்தனை ஜாமினில் விடுவித்தார்.
கோவை: நகை வியாபாரியிடம் 2-கிலோ நகை மற்றும் 7.5-லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், மூவரை கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நிபந்தனை ஜாமினில் விடுவித்தார்.
கோவை அருகேயுள்ள வடவள்ளியை சேர்ந்தவர் சண்முகம், 50. நகை வியாபாரியான இவர், தங்க கட்டிகளை வாங்கி வந்து மொத்தமாக நகை செய்து கொடுத்து வருகிறார். கடந்த அக்., 30-ல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்குச் சென்றார். தங்க கட்டிகளை வாங்கி கொண்டு கோவைக்குத் திரும்பினார்.
காந்திபுரத்துக்கு பேருந்தில் வந்த சண்முகம், தனது பைக்கில், இரவில் வடவள்ளிக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் வழிமறித்து, அவரை தாக்கிவிட்டு, 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.7.5 லட்சத்தைப் பறித்துத் தப்பியது.
வடவள்ளி போலீசார் விசாரித்து, 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களில் அவரது பட்டறையில் வேலை செய்த பவானிசிங்(23), கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சிக்கந்தர் பாட்சா(35), சம்சுதீன்(30), ஆகியோர் ஜாமின் கேட்டு, கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி, மூவரையும் நிபந்தனை ஜாமினில் விடுவித்தார்.