கோவை மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் கோவையின் துணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் கோவையின் துணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறியதாவது:-

கோவை மாநகர மன்றம் தேர்வு செய்யப்படாத காலத்திலே, அண்ணாதிரவிட கழகம் இருந்த காலத்தில் வேலுமணி அமைச்சராக இருந்த நேரத்தில், கோவை நகரத்தினுடைய குடிநீர் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுக்காலாக ஒப்பந்தத்தில் அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
அப்பொழுது, கோவையின் அனைத்து பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்றைய தினம் எதிர்க்கட்சி என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அனைத்து கட்சிகளும் இணைந்து நின்று சூயஸ்க்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தோம்.
பல இடங்களில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் இடத்தில் சூயஸ் நிறுவனத்தினால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்தோம். கோவை நகரத்தின் குடிநீர் என்பது அரசினுடைய குடிநீர் கால்வாய் வாரியத்தின் மூலமாகவே செய்யப்பட வேண்டுமே தவிரத் தனியார் நிறுவனங்களால் செய்யப்படக் கூடாது.

இந்தியாவிலேயே எந்த நகரத்திலும் இல்லை என்ற நிலையில், கோவையில் அதிமுக இந்த ஏற்பாட்டினை செய்தனர். ஆகவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்பது மட்டுமில்லை, திமுக தேர்தல் அறிகையில் கூறியது போல திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்பதைக் கூறியுள்ளோம்.
திமுக மக்கள் நல அரசாங்கமாக செயல்பட்டு வருகின்றது என்பதை வரவேற்கிறோம். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகக் கேட்டுக்கொள்வது ஏற்கனவே கூறியது போல சூயஸ் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கிறோம்.
அமைச்சர் இடத்திலும், இது குறித்துக் கூறியுள்ளோம். சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.