11-வது நாளாக தொடரும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்: ரூ.1000 கோடி காடாத்துணி உற்பத்தி பாதிப்பு, மீண்டும் பேச்சுவார்த்தை

கூலி உயர்வை அமல் படுத்தக்கோரி கடந்த 9-ந்தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 11-வது நாளாக போராட்டம் நடைபெறுவதால், காடாத்துணி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கூலி உயர்வை அமல் படுத்தக்கோரி கடந்த 9-ந்தேதி முதல் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின், மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில், கூலி உயர்வை அமல் படுத்தக்கோரி கடந்த 9-ந்தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 11-வது நாளாக போராட்டம் நடைபெறுவதால், காடாத்துணி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தால் சைசிங், நூற்பாலைகள், ஓ.இ., மில்கள், பீஸ் செக்கிங், மடிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறும்போது, இந்த வேலை நிறுத்தத்தால் இதுவரை ரூ.1000 கோடி மதிப்பிலான காடா துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றனர்.

மேலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதம் மற்ற ரகத்திற்கு 20 சதவீதம் என கூலி உயர்வு அறிவித்துவிட்டு, தற்போது ஜவுளி உற்பத்தியாளர்கள் 10 சதவீதம் தருகிறோம், 12 சதவீதம் தருகிறோம் என கூறுவது நியாயமில்லை, என்றனர்.

எனவே, நாளை 20 ஆம் தேதி (வியாழக் கிழமை) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்துள்ளனர். இதில் ஜவுளி உற்பத்தியாளர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து புதிய ஒப்பந்த கூலியை பெறும் வரையில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும், என்று தெரிவித்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...