கோவையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..!

போக்சோவில் கைது செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், அந்த நபரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வசித்து வரும் 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியிடம், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய அவரது உறவினர், ஆசை வார்த்தைகள் பேசி கடந்த 9ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, நேற்று மீண்டும் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சிறுமி அதனை மறுத்திடவே தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், சிறுமியின் உறவினர்களிடம் சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறும் கேட்டுள்ளார்.

இதனால், அந்த நபருக்கும் சிறுமியின் வீட்டாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சிறுமி தனது உறவினர்களிடம், தனக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...