கோவை மாவட்டத்தில் நாளை கோவிட் பூஸ்டர் தடுப்பூசி முகாம்..!

மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனை மற்றும் 89 சுகாதார நிலையங்களில் இந்த பூஸ்டர் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி முகாம் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் நாளை நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துள்ளது. கோவிட் 2 'டோஸ்' போடப்பட்டாலும், 3வது 'டோஸ்' பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என, மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதன் அடிப்படையில், இந்த பூஸ்டர் ஊசி முன்களப்பணியாளர், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு, மூன்றாம் டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி கடந்த, 10ம் தேதியன்று துவங்கப்பட்டது.

இத்திட்டத்தில், 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர். தற்போது வரை கோவை மாவட்டத்தில், 9 ஆயிரத்து 200 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நாளை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் 13 அரசு மருத்துவமனை, 89 சுகாதார நிலையங்களில் இந்த முகாம் நாளை நடக்கவுள்ளது. தகுதி உடைய நபர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், என்று தெரிவித்தார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...