கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு சட்டை கிடந்ததால் பரபரப்பு..!

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கருவூல மையத்தின் பாதுகாப்பு அறை நீண்ட நாட்களாக தூசடைந்து காணப்படுவதால் இது போன்ற உயிரிகள் வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு சட்டை கிடந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கருவூல மையத்தின் பாதுகாப்பு அறைக்கு அருகில் பாம்பின் தோல்கள் கிடந்துள்ளன. இதனை கண்ட மைய பணியாளர்கள் அலுவலக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அதிகாரிகள் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவித்து, அங்கு வந்த மீட்பு பணி துறையினர் பாம்பை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பாம்பு தென்படாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.



அந்த அலுவலகம் நீண்ட நாட்களாக தூசடைந்து காணப்படுவதால் இது போன்ற உயிரிகள் வரக்கூடும் என்றும், எனவே அறையை தூய்மை செய்யும் படியும் மீட்பு பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல மக்கள் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு சட்டை கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பாதுகாப்பு அறையில் 24 மணி நேரமும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட கூடும்.

மேலும், கிடைத்த பாம்பின் தோல் நல்ல பாம்பின் தோல்கள் என மீட்பு பணி துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...