சிறுத்தையை பிடிப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 5 கேமராக்கள் தற்போது வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் 3வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணி நடந்து வரும் நிலையில், சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை வனத்துறை வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் தனியார் குடோன் ஒன்றில் சிறுத்தை ஒன்று இருப்பதாக நேற்று முன்தினம் குடோன் பணியாளர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து வனத்துறையினர், வனவிலங்கு மருத்துவர்கள், காவல்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுத்தையை பிடிக்க குடோனில் கதவுகள் முன்புறமும் கூண்டுகள் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், 3வது நாளான இன்றும் சிறுத்தையை பிடிக்கும் பணி தொடர்ந்து வருகிறது. இதனிடையே, இன்று அதிகாலை 3:20 மணி அளவில் சிறுத்தை குடோனில் நடமாடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. அந்த கேமரா காட்சிகளை மாவட்ட வனத்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
மேலும், சிறுத்தையை பிடிப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் 5 கண்காணிப்பு கேமராக்கள் தற்போது வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.