கோவை அருகே மொபட்டுக்கு தீ வைக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது

சம்பவம் குறித்து விஜயகுமார், சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பா.ஜ.க. இளைஞரணி துணைச் செயலாளர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை அருகே மொபட்டுக்கு தீ வைக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

கோவை சூலூர் ஜல்லிப்பட்டி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47). டிரைவராக வேலைப்பார்க்கும் இவர், தி.மு.க வில் நிர்வாகியாகவும் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவர் கோவை வடக்கு பா.ஜ.க இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில், நேற்று விஜயகுமார் ஜல்லிப்பட்டி பகுதியல் மொபட்டில் சென்று கொண்டிருந்த போது, குடிபோதையில் இருந்த செல்வகுமார் திடீரென விஜயகுமார் வந்த வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து, அதனை விஜயகுமார் மொபட் மீது ஊற்றி தீ வைக்க முயற்சி செய்த போது, அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த செல்வகுமார் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். காயமடைந்த விஜயகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து விஜயகுமார், சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பா.ஜ.க. இளைஞரணி துணைச் செயலாளர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...