இந்த ஆர்ப்பாடத்தின் போது, நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்றும், விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
திருப்பூர்: கடுமையாக உயர்ந்து வரும் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூரின் பிரதான தொழிலாக இருக்கும் பின்னலாடைத் தொழில் துறைக்கு முக்கிய மூலப் பொருளாக இருப்பது நூல். ஒவ்வொரு மாதமும் நூலின் விலை மாற்றி அமைக்கப்படும்.
கடந்த ஆண்டு முழுவதும் நூலின் விலை ஏற்றமாகவே இருந்து வந்தது. இதனை கண்டிக்கும் விதமாக தொழில்துறை சார்பில் நேற்று மற்றும் இன்று என இரு நாட்கள் வேலை நிறுத்த போராட்டமும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நூல் மற்றும் பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று ரயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிட்மா உற்பத்தியாளர் சங்கத்தினர், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் என 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாடத்தின் போது, நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்றும், விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.