சிறுத்தையை கண்காணிக்க இரவு நேர கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என மாவட்ட வன மருத்துவர் தெரிவித்துள்ளார். பொதுவாக இரவில் நடமாடும் விலங்கு என்பதால் இரவுக்குள் கூண்டுக்குள் அகப்பட்டுவிடும் என தெரிவித்தார்.
கோவை: மதுக்கரை பகுதியில் பதுங்கிய சிறுத்தையை கண்காணிக்க இரவு நேர கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என மாவட்ட வன மருத்துவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

கோவை மதுக்கரை வன எல்லையை ஒட்டியுள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள குனியமுத்தூரில் உள்ள தனியார் குடோனில் இருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணி சுமார் 8-மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து வருகிறது.

மேலும் சிறுத்தையைப் பார்க்கும் ஆவலில் பொதுமக்கள் அதிக அளவு கூடி வருவதால் குனியமுத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட வன கால்நடை மருத்துவர் சுகுமார், கூறுகையில், நேரக்கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 2 வாயில்களில் கூண்டுகளில் இறைச்சி வைக்கப்பட்டுள்ளது.
பாழடைந்த கட்டிடம் என்பதால் ஓடுகளின் மேல் ஏறி மயக்க ஊசி செலுத்துவது கடினம் காலை வரை பிடிபடவில்லை என்றால் நாளை காலையில் அதிகாரிகளுடன் கலந்து தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். பொதுவாக இரவில் நடமாடும் விலங்கு என்பதால் இரவுக்குள் கூண்டுக்குள் அகப்பட்டுவிடும் என தெரிவித்தார்.