கோவையில் இரவு நேர ஊரடங்கில் இயங்கிய 4-பேருந்துகளுக்கு ரூ.1-லட்சம் அபராதம்

இரவு நேர ஊரடங்கில் சட்டத்திற்குப் புறம்பாக 4-ஆம்னிப் பேருந்துகள் இயக்கியது தெரியவந்ததையடுத்து, பேருந்துகளுக்கு ரூ.1-லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.



கோவை: இரவு நேர ஊரடங்கில் சட்டத்திற்குப் புறம்பாக 4 ஆம்னிப் பேருந்துகள் இயக்கியது தெரியவந்ததையடுத்து பேருந்துகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் 15-ந் தேதி இரவு 10 மணி முதல் இன்று (17-ந் தேதி) காலை 5 மணி வரை பொது ஊரடங்கு அமலில் இருந்தது.

இதனால் தமிழகத்தில் பொது போக்கு வரத்துத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் சில ஆம்னிப் பேருந்துகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம் செய்து பேருந்துகளை இயக்கி உள்ளனர்.

இது குறித்து கோவை சரகம் இணைப்போக்குவரத்து ஆணையருக்குப் புகார் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கம் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தணிக்கையின் போது சட்டத்திற்குப் புறம்பாக 4 ஆம்னிப் பேருந்துகள் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து பேருந்துகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், விதிகளை மீறி பேருந்துகளை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை சரக இணைப்போக்குவரத்து ஆணையர் உமாசக்தி தெரிவித்தார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...