திருப்பூரில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து நாளை ரயில் மறியல் போராட்டம் - பனியன் துணி உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு..!

மேலும், மூலப்பொருட்கள் விலைகளை கட்டுப்படுத்தி, ஜவுளித்துறையை பாதுகாக்கக் கோரி ‘நிட்மா’ சங்க அலுவலகத்தில் துவங்கி திருப்பூர் ரயில் நிலையம் வரை ஊர்வலம் நடைபெறுகிறது.



திருப்பூர்: திருப்பூரில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக பனியன் துணி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.



திருப்பூர் பனியன் துணி உற்பத்தியாளர் சங்க (நிட்மா) அவசர ஆலோசனை கூட்டம் வாலிபாளையத்தில் நடந்தது. பருத்தி, பஞ்சு உட்பட மூலப்பொருட்கள் விலைகளை கட்டுப்படுத்தி, ஜவுளித்துறையை பாதுகாக்கக் கோரி நாளை ‘நிட்மா’ சங்க அலுவலகத்தில் துவங்கி திருப்பூர் ரயில் நிலையம் வரை ஊர்வலம் நடத்தப்படும் எனவும் காலை 10 மணிக்கு, தொழில் அமைப்பினர் இணைந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் ரத்தினசாமி செய்தியாளரிடம் பேசும்போது, பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் இன்றும் நாளையும் திருப்பூரில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்து நடைபெற்று வருகிறது. இதற்கு நிட்மா சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது.

மூலப்பொருள் விலையேற்றத்தால் உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்தி ஜவுளித்துறையை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளைய தினம் ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...