தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பும், தடுப்பூசியின் தாக்கமும்: 7 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்றால் 1,18,017 நபர்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதில் 7 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் 93-சதவீதம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர் என தமிழக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: தடுப்பூசி செலுத்தும்போது, கொரோனா தொற்றிலிருந்து கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என தமிழக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் அதிகளவில் இருந்தனர். இதனால், தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அதிகப்படியானோர் மூச்சு திணறல் ஏற்பட்டு, ஆக்சிசன் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. மேலும், அதி தீவிர சிகிச்சை மற்றும் செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) உதவி தேவைப்படுவோர் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தது.

தினமும் நூற்றுக்கணக்கானோர் மரணம், ஆக்சிசன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு என்று கொரோனா இரண்டாம் அலை, மக்களிடையே பெரும் அச்சத்தையும், மனரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

இதனிடையே, கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், நோய் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதாக, தமிழக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தற்போது, கொரோனா தொற்றால் 1,18,017 நபர்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 7-சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் 93-சதவீதம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர் என தமிழக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு லேசான தொண்டை வலி, இருமல், சளி, காய்ச்சல் மட்டுமே ஏற்படுவதாகவும் அவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய அறிகுறிகள் ஏற்படுவதில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அவ்வாறு தொற்று ஏற்பட்டாலும் 2-3 நாட்களுக்குள் குணம் அடைந்து வருகின்றனர்.

ஆனால், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு பெரிய அளவில் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, என்று எச்சரித்துள்ளனர்.

எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளதவர்கள் இனியும் தாமதிக்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...