நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி வரும் 21ம் தேதி திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

மேலும், வரும் 25ம் தேதி தொழில்துறையினரை அழைத்துச் சென்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.



திருப்பூர்: உயர்ந்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி வரும் 21ம் தேதி திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே பஞ்சாப் அரசை கண்டித்து பாஜகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

அப்போது, தள்ளுவண்டியில் பழங்களை விற்பனை செய்த முத்துசாமி என்பவர் மோடியை பற்றி விமர்சனம் செய்ததாகக் கூறி, அவர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் பல்லடம் தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்ட இருவரின் வீடுகளுக்குச் சென்று, அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-



பல்லடத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தவறுதலாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீதான வழக்கை நீதிமன்றத்தில் நாங்கள் சந்திப்போம். இதன் மூலம் எங்களுக்கு இரண்டு புதிய தலைவர்கள் கிடைத்துள்ளார்கள். பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி என குழந்தைகளை வைத்து மத்திய அரசு குறித்து தவறான தகவல்களை பரப்பி வரும் தனியார் தொலைக்காட்சி குறித்து தகவல் ஒளிபரப்பு ஆணையத்தில் புகார் அளித்து வருகிறோம். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நூல் விலை உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என 21ம் தேதி அன்று திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 25ம் தேதி தொழில்துறையினரை அழைத்துச் சென்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...