கோவை மாநகராட்சியில் வாகன நிறுத்தத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவை செல்வபுரம் தொகுதியில் பாஜக சார்பில் "நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில்" சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.



கோவை: கோவை மாநகராட்சியில் வாகன நிறுத்தத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து வருகிற 21 ஆம் தேதி பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



செல்வபுரம் தொகுதியில் பாஜக சார்பில் "நம்ம ஊரு மோடி பொங்கல் விழா" எனும் தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



விழாவில், 108 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்தும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



இதில், சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் பேசுகையில்: பாஜக இளைய தலைமுறைக்கு நம் கலாச்சாரத்தை எடுத்து செல்லும் வகையில் பொங்கல் விழாவை நடத்தி வருகிறோம். பிரதமரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக சார்பில் திருவள்ளுவருக்கு ஒப்பட்ட போஸ்டரில் உடை காவி நிறமாக இருந்தது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக உண்மையை புரிந்து கொண்டு விட்டார்கள். தமிழக மக்கள் திருவள்ளுவர் எப்படி வாழ்ந்ததார் என பார்க்க துவங்கி விட்டார்கள். திருவள்ளுவர் இந்து முறைப்படி வாழ்ந்தவர் என்று பதிலளித்தார். 

"வேலுநாச்சியார் மற்றும் சிதம்பரனார் தேசிய தலைவர்கள் இல்லை என்பது மத்திய அரசின் கருத்து அல்ல. குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி அனுமதிக்காதது குறித்து பாதுகாப்புத் துறை உரிய விளக்கம் அளிக்கும். கேரள மாநில ஊர்தியில் ஆதிசங்கரர் படம் இடம்பெறக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளதால், நாராயணகுருவின் படமும் இடம் பெறவில்லை. நேரம் கருதி அனைத்து மாநில அரசுகளின் ஊர்திகளும் பங்கேற்க முடியாது", என்றார். 

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான நகைச்சுவை நிகழ்ச்சி குறித்து பதில் அளித்த அவர், அது கருத்து சுதந்திரம் அல்ல என்றும் குழந்தைகளை பாதுகாக்கும் என்.சி.பி.சி.ஆர் அமைப்பின் விதிமுறைகளுக்கு அது எதிரானது. வஞ்சகமான முறையில் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை சட்ட ரீதியாக அணுகுவதாகவும், அவர் தெரிவித்தார். 

உத்திரபிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது என்ற நிலைப்பாடும், சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் விலகி சென்றுள்ளதாகவும், நிச்சயம் பாஜக உ. பி தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும், என தெரிவித்தார். 

பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதின் மூலம், பிரதமரின் பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும், உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் முழுமையான தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவித்தார். 

கோவை மாநகராட்சியில் 30 சாலைகளில் வாகன நிறுத்தம் செய்ய கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல , இதனை கண்டித்து வருகிற 21ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு முன்பாக மாநகராட்சி நிர்வாகம் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இல்லையேல், மக்கள் தேர்தலில் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார். 

பொங்கல் பரிசிலிருந்த வெல்லம் உருகும் என்பதை விசாரிக்க டெஸ்லா தலைவர் எலான் மஸ்கை அழைத்து வந்து ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும், எனவும் விஞ்ஞான ஊழலுக்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கம் அளிக்கிறார்கள், என்று விமர்சித்தார். 

உதயநிதியை, கிரவுன் பிரின்ஸ் என விமர்சித்த அவர், நகைக்கடன் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மூலம் தமிழக அரசு 500 வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்பதற்கு சான்றாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

பாஜக - அதிமுக கூட்டணி சிறப்பாக உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது என்று கூறிய அவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலியாகியுள்ளதாகவும், பாஜக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.

கார்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தன்னை அவதூறாக பேசுவதோடு, மேகதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் எனவும் பேசுகிறார். ஆனால், இதுவரை திமுக இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. மேகதாதுவில் அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது எனவும் தமிழக அரசின் உரிமைகளை மீட்டெடுக்காவிட்டால் காவிரி, முல்லை பெரியாறு அணைகளின் உரிமைகள் பறிபோகும், எனவும் தெரிவித்தார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...