மேலும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் கலந்துகொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுகவினர் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழாவினை இன்று அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நகர செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் கலந்துகொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த விழாவில், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் மனோகரன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் கண்ணம்மாள், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தலைவர் நாகராணி கனகராஜ், லட்சுமணன், கிரி, கார்த்திக், தங்கராஜ், தண்டபாணி, நாகராஜ், நடராஜ், மகேஷ் அரவிந்த், மாரிமுத்து, கோபால் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.