கோவை கிணத்துக்கடவு அருகே மனைவி, மகள் மாயம் - கணவர் காவல் நிலையத்தில் புகார்..!

இதையடுத்து, புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இருவரையும் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு முள்ளுப்பாடியில் மனைவி, மகள் மாயமானதையடுத்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (30), இவருக்கு இந்திராணி (28) என்ற மனைவியும், 13 வயதில் மகளும் உள்ளனர்.

இந்நிலையில், மணிகண்டனுக்கும் மனைவி இந்திராணிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்த இந்திராணி மற்றும் 13 வயது மகள் வெளியே சென்றவர்கள் திரும்பி வரவில்லை எனத் தெரிகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த மணிகண்டன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்துத் தருமாறு நேற்று புகார் அளித்தார்.

இதனையடுத்து, புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இருவரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...