முழு ஊரடங்கு: காணும் பொங்கலை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

காணும் பொங்கல் பண்டிகை என்றாலே பொதுமக்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் கோயில்களுக்குச் சென்று தங்களது பொழுதைக் கழிப்பது வழக்கம் இன்று ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடக்கியுள்ளனர்.

கோவை: தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

பொள்ளாச்சி பகுதியைப் பொருத்தவரை பால் வினியோகம், மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு முக்கிய வீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மாநில எல்லைகளான கோபாலபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட 7 சோதனைச் சாவடிகளிலும் இரவு பகலாக காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் மாவட்ட இணைப்பு சாலைகள், மீன்கரை சாலை, உடுமலை சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். தேவையில்லாமல் வெளியில் வரும் வாகனங்களை நிறுத்தி காவல்துறை அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

காணும் பொங்கல் பண்டிகை என்றாலே பொதுமக்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் கோயில்களுக்குச் சென்று தங்களது பொழுதைக் கழிப்பது வழக்கம் இன்று ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடக்கியுள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...