பொள்ளாச்சியில் ஆதரவற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவை கோரிக்கை

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவை கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவை கோரிக்கை வைத்துள்ளனர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

தற்போது இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்குநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை உள்ளிட்ட தன்னார்வலர்கள் காலை, மதியம், இரவு உள்ளிட்ட மூன்று வேளைகளிலும் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

இன்று மதியம் ஆதரவற்றவர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி நேரில் வந்து உணவு பொட்டலங்களை வழங்கினார்.



பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்பபரிசோதனை மேற்கொண்டனர்.

ஆதரவற்ற நிலையில் வசிக்கும் இவர்களைப் போன்ற பெரும்பாலானவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லை. சாலையோரங்களில் இருப்பதால் இவர்களுக்கு நோய்த்தொற்று எளிதாகப் பரவும் அபாயம் உள்ளது.

எனவே சுகாதாரத்துறையினர் இவர்கள் மீது கருணை கொண்டு ஆவணங்கள் இல்லாமல் தடுப்பூசி செலுத்தி கொரோனா, ஒமக்கிரான் நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற வழிவகை செய்யவேண்டுமென்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...