இம்முறை ஊரடங்கு காரணமாகவும் பொங்கல் கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் கோவை குற்றாலம் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கோவை: இம்முறை ஊரடங்கு காரணமாகவும் பொங்கல் கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் கோவை குற்றாலம் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழர் திருநாள் பொங்கல் இவ்வாண்டு கொரோனா தொற்றால் பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி காணும் பொங்கல் ஆன இன்றும் பொங்கல் கட்டுப்பாடுகளுடன் சேர்த்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் காணும் பொங்கலை வீட்டிலிருந்தபடி கொண்டாடி வருகின்றனர்.
பொதுவாகக் காணும் பொங்கல் அன்று உறவினர்கள், அனைவரும் ஒன்று கூடி சுற்றுலாத்தலங்கள் கோவில்கள் ஆகிய இடங்களுக்குச் சென்று காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இம்முறை முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் இல்லங்களிலிருந்தபடியே காணும் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரைக் காணும் பொங்கல் அன்று கோவை குற்றாலம் பொதுமக்களால் சூழ்ந்து காணப்படும். கோவை குற்றாலத்துக்குக் கோவை மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் திரளாக வருவது வழக்கம். ஆனால் இம்முறை ஊரடங்கு காரணமாகவும் பொங்கல் கட்டுப்பாடுகள் காரணமாகச் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் கோவை குற்றாலம் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.