பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் ரூ.675.19 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள 274 டாஸ்மாக் மதுக்கடைகளில், ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது
கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை மாவட்டத்தில், ஜனவரி 14 ஆம் தேதிவெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலமாக 5,410 மதுக்கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு தினமும் ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று வருவது வழக்கம். குறிப்பாக, தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிக அளவு விற்பனை நடைபெறும்.
அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் ரூ.675.19 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
இதில், கோவை மாவட்டத்தில் உள்ள 274டாஸ்மாக் மதுக்கடைகளில், பொங்கல் தினமான 14 ஆம் தேதி ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
திருவள்ளுவா் தினத்தையொட்டி டாஸ்மாக்நேற்று தமிழகம் முழுவதும், மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், முன் தினமே மது வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.