பொள்ளாச்சியில் யானைகள் முகாமில், வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் முகாமில், வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அரசு உரிய நிவாரணம் வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் முகாமில், வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அரசு உரிய நிவாரணம் வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான வளர்ப்புயானைகள்முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அசோக் என்ற 12 வயது யானையின் (பாகன்) காவடியாக, கோழிகமுத்தி மலை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(45) மற்றும் முருகன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல அசோக் என்ற யானைக்கு ஆறுமுகம் உணவு அளித்து விட்டு மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு அழைத்துச் சென்றபோதுதிடீரென அந்த யானை முருகனைத் தாக்கியது. அதைப் பார்த்த ஆறுமுகம் அவரை காப்பாற்றச் சென்றபோது அவரையும் தாக்கியது.

இதில் கீழே விழுந்த ஆறுமுகத்தின், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில், வனத்துறையினர் காயமடைந்த ஆறுமுகத்தை ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.



ஆனால் மருத்துவமனையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சவக்கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று டாப்ஸ்லிப் கோழிகமுத்தி முகாமில் யானை பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டதால், மகிழ்ச்சியிலிருந்த மலைக்கிராம மக்கள், இந்த சம்பவம் காரணமாகச் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மேலும், உயிரிழந்த ஆறுமுகத்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...