கோவையில் எளிமையான முறையில் கொண்டாடப்பட்ட மாட்டு பொங்கல்.

இந்த ஆண்டு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மாட்டு பொங்கல் கொண்டாடுவோர் அவரவர் வீடுகளிலேயே பட்டி வைத்து, பூஜை செய்து எளிமையாக கொண்டாடினர்.


கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு பொங்கல் விழா கொண்டாட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், நேற்றைய தினம் பொங்கல் விழா மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினம் மாட்டு பொங்கல் விழாவும் மிக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. 



கோவை மாவட்டத்தில் வழக்கமாக மாட்டு பொங்கல் தினத்தன்று மாடுகளுக்கு அலங்காரம் செய்து, படையல் படைத்து சாலைகளில் வளம் வர வைப்பது வழக்கமான ஒன்று. குறிப்பாக, கோவையில் கிராம பகுதிகளில் மாட்டுப்பொங்கல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். 



இந்த ஆண்டு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மாட்டு பொங்கல் கொண்டாடுவோர் அவரவர் வீடுகளிலேயே பட்டி வைத்து, பூஜை செய்து எளிமையாக கொண்டாடினர். தங்கள் வீடுகளில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளை சீவி பெயிண்ட் அடித்து, அலங்கார கயிறு உள்ளிட்ட பொருட்களை கட்டி பூஜை செய்துவழிபட்டனர்.

இது குறித்துமாட்டு உரிமையாளர்கள் கூறுகையில், "உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைக்கும் கால்நடைகளை போற்றி நன்றி கூறும் நோக்கோடு இந்த பண்டிகை கொண்டாப்பட்டு வருகிறது. 

இந்த நாளில் இளநீர், தயிர், பால், நவதானியங்கள் நிரம்பிய பட்டி குளத்தில், பசு மாடு கால் வைத்து பட்டி மிதித்தல் நிகழ்வு என்பது முக்கிய நிகழ்வாகும். 

மாடுகளின் வாயினை நன்கு கழுவி, முன்று முறை வலம் வர வைத்து பட்டி மிதிக்க வைப்போம். முன்னதாகச் சூரியனுக்கு படையல் வைத்துப் பொங்கலை மாடுகளுக்கும் உண்ண கொடுப்போம். பின்னர்,கால்நடைகள் நன்கு ஒய்வு கொடுத்து விடுவோம், என்றார்.

கொரோனா என்பதால் நாளை மாடுகளை கோவிலுக்கு அழைத்து செல்ல முடியாத சூழல் உள்ளதால்,இன்றே தோட்டங்களில் மாடுகளுக்கு சிறப்புபூஜை செய்து விட்டோம்", என்றார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...