காவலரை கத்தியை காட்டி மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் சிறையிலடைக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து 100-கிராம் கஞ்சா, 21-ஆயிரம் ரூபாய் பணத்தையும், இரண்டடி நீளம் உள்ள பட்டாக்கத்தியையும் காவல்துறை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் காவலரை கத்தியை காட்டி மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் சிறையிலடைக்கப்பட்டனர்.
கோவை உக்கடம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக தேவகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை உக்கடம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது உக்கடம் தியேட்டர் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் நின்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து, தேவகுமார் அந்த ஆட்டோ அருகில் சென்று பார்த்தார். அப்போது அந்த ஆட்டோவில் அமர்ந்திருந்தவர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். இதை அடுத்து தேவகுமார் பொது இடத்தில் இப்படி அமர்ந்து மது அருந்தக் கூடாது என எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் ஆட்டோவில் அமர்ந்திருந்தவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் அங்கிருந்து செல்ல முடியாது எனக் கூறி தேவகுமார் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்படவே ஆட்டோவில் அமர்ந்து இருந்த நபர் ஒருவர் பட்டாகத்தியை எடுத்து தேவகுமாரை கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டத் துவங்கினார். உடனே அந்த பகுதியில்பாதுகாப்புப் பணியிலிருந்த மற்ற காவல்துறையுடன் ஆட்டோவில் இருந்த நபரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த நபரிடம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மதுபட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டோவில் இருந்த நபர்களை பிடித்து காவல்துறை நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வடகோவை பகுதியைச் சேர்ந்த நல்லசிவம் என்பவரின் மகன் முருகபூபதி (33) என்பதும் ஆட்டோ ஓட்டுநரான இவர் தனது நண்பர் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் ராஜேஸ் என்கிறராஜேஷ்குமார் (35)உடன் மது அருந்திக் கொண்டு இருந்ததும் மேலும் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறை அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 21 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இரண்டடி நீளம் உள்ள பட்டாக்கத்தியையும் காவல்துறை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.