கோவை அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரிடா் காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஜனவரி 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க முதல்வர் அ.நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரிடா் காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஜனவரி 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க முதல்வர் அ.நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் 2-மாத காலத்துக்குத் தற்காலிகமாகத் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிவதற்கு மருத்துவர்கள், செவிலியர் உள்பட 8-பிரிவுகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

காலிப்பணியிடங்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் சம்பளம்):

மருத்துவர்கள் - 30 போ் (ரூ.60 ஆயிரம்), உயிர் மருந்தியல் பொறியாளர் 1 (ரூ.20 ஆயிரம்), செவிலியர் - 50 போ் (ரூ.14 ஆயிரம்), நுண்கதிா்நுட்புநா் - 3 போ் (ரூ.12 ஆயிரம்), ஆய்வக நுட்புநா் 8 போ் (ரூ.12 ஆயிரம்), மயக்கவியல் நுட்புநா் - 10 போ் (ரூ.11 ஆயிரம்), தரவு பதிவர் - 10 போ் (ரூ.10 ஆயிரம்), ஓட்டுநா் - 4 போ் (ரூ.10 ஆயிரம்) ஆகியோர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதற்கான நேர்காணல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருத்தரங்க அறையில் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு ஜனவரி 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...