கோவையில் உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளிலிருந்து 100 கிலோ கோழி, 20 கிலோ ஆட்டுக்கறி பறிமுதல்.

உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து 100 கிலோ கோழிக்கறி, 20 கிலோ ஆட்டுக்கரி பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.7 ஆயிரம் வரை விதிமீறலில் ஈடுபட்ட இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் திருவள்ளுவர் தினமான இன்று தமிழக அரசின் உத்தரவின் படிஇறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகள் இன்று ஜனவரி 15, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு செயல்பட தடை விதித்தும், உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதே போல, கோவை மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம், சிங்காநல்லூர், கணபதி, போத்தனூர் செட்டிபாளையம், துடியலூர் அறுவைமனைகளும் மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் இறைச்சிக் கடைகளும் செயல்படாது, என்று அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து 100 கிலோ கோழிக்கறி, 20 கிலோ ஆட்டுக்கரி பறிமுதல் செய்யப்பட்டு,

ரூ.7 ஆயிரம் வரை விதிமீறலில் ஈடுபட்ட இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...