முள்ளக்காடு என்ற பகுதியில் சேவல் சண்டைக்குப் பயன்படுத்திய 2-சேவல்களைப் பறிமுதல் செய்த போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்திய மூன்று பேரை கைது செய்தனர்.
கோவை: சேவல் சண்டைக்குப் பயன்படுத்திய 2-சேவல்களைப் பறிமுதல் செய்த போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்திய மூன்று பேரை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள அரசம் பாளையம் கராச்சேரி சாலையில் உள்ள முள்ளக்காடு என்ற பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சேவல் சண்டைக்குப் பயன்படுத்திய 2-சேவல்களைப் பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த கோதவாடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(38)கப்பளங்கரை பகுதியைச் சேர்ந்த பரமசிவம்(42) கோதவாடி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்(21) உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.
பின்னர் கைது செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.