ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப்பில் யானை பொங்கல் கொண்டாட்டம்; 27 வளர்ப்பு யானைகள் பங்கேற்பு.

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கலை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். வளர்ப்பு யானைகளுக்கு அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பழம், கரும்பு, சத்து மாவு என உணவாக அளிக்கப்பட்டது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கலை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழி கமுத்தியில் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட இருபத்தி ஏழு காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.



தமிழக அரசு உத்தரவின் பேரில் இங்குஆண்டு தோறும் யானை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானோ வைரஸ் தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்து வந்தது.

தற்பொழுது தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அறிவித்த நிலையில் சமூக இடைவெளி மற்றும் முக்கவசம் அணிந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று யானை வளர்ப்பு முகாமுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.



இன்று யானை பொங்கல் நிகழ்ச்சிக்கு வளர்ப்பு யானைகளுக்கு அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்து பழம், கரும்பு, சத்து மாவு என உணவாக அளிக்கப்பட்டது. இதில் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராம சுப்பிரமணியம், துணை கள இயக்குநர் கணேசன், வனச்சரகர்கள் மணிகண்டன், காசிலிங்கம், வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் மாற்றம் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் யானை பொங்கல்நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.



Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...