கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்ல தடை - கோவை மாநகராட்சி ஆணையர்

மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட அனைத்து இடங்களில் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு இன்று முதல் தடை செய்யப்படுகிறது.


கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் ரேஸ் கோர்ஸ்உள்ளிட்ட இடங்களில்மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பொதுமக்கள் செல்வதற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்தினமும் காலை, மாலை என்று நடைபயிற்சிசெல்வது வழக்கம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த காலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது, ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள மாநகராட்சி தடை விதித்தது. பின்னர், கொரோனா பரவல் குறைந்ததால், நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அங்கு தினமும் பலர் நடைபயிற்சி மேற்கொள்வதுடன், உடற்பயிற்சியும் செய்து வருகிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவது இல்லை. அத்துடன் சமூக இடைவெளியும் கடைபிடிப்பது இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவிக்கையில், "கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட அனைத்து இடங்களில் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு இன்று முதல் தடை செய்யப்படுகிறது", என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...